மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒலி-ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் அரசு உதவி செய்ய பரிந்துரைக்க வேண்டுமென
கோரிக்கை மனு அளித்தனர்.தரங்கம்பாடி தாலுக்கா ஒலி-ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் வட்டாச்சியர் கோமதியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.கொரோனா ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் தவிப்பதாகவும், மற்ற தொழில்கள் செய்ய அனுமதி அளித்துள்ள தமிழக அரசு தங்களையும் அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்த முதலீட்டில் ஒலி பெருக்கிகளை வீடுகளில் வைத்து தொழில் செய்தால் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வட்டாச்சியரிடம் அளித்தனர். சங்கத்தின் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் கனகராஜ், செயலாளர் சந்தனசாமி, துணைத்தலைவர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.எலக்ட்ரானிக் பொருட்களை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருப்பதால் பழுதடைந்து போகும் நிலை ஏற்பட்டு விடும். அன்றாட உணவிற்கே கடும் அவதிப்படுவதாகவும் வேதனையுடன் கூறி சென்றனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்


You must be logged in to post a comment.