மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே நல்லாடை பனங்குடியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது.
நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் முன்னிலையில் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் நல்லாடை ஊராட்சி, கொத்தங்குடி ஊராட்சி, எடுத்துக்கட்டி ஊராட்சி, உத்திரங்குடி ஊராட்சி, ஈச்சங்குடி ஊராட்சி ஆகிய பகுதியை சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 150 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். சித்திக் ,பாலா அருள்செல்வன்,ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், பி. எம். அன்பழகன், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர், தகவல் தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் கிருபாவதி சிவக்குமார், ஐயப்பன் சிங்கராசு அறக்கட்டளையின் தலைமைச் செயலாளர் ஜெயகாந்தன், தம்பு மோகன், பைலட் மற்றும் 10 ஊராட்சியில் ஊராட்சி மன்ற திமுக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.a


You must be logged in to post a comment.