பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிகே மாவட்ட பொறுப்பாளர் ஈழவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாளபுத்தூரை சார்ந்த பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்று, விசிக தலைவர் தொல் திருமாவளவன் மீது சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவமரியாதை செய்யும் நோக்கத்தோடு இழிவுபடுத்திவருபவர்களை கைது செய்ய கோரியும், மயிலாடுதுறை நகராட்சி நிர்வாக சீர்கேட்டை நோக்கிக் கொண்டுசெல்லும் நகராட்சி ஆணையர் அண்ணாமலையை கண்டித்தும், மயிலாடுதுறை நகராட்சி சொத்துக்களை விதிகளுக்கு புறம்பாக தனியாரிடம் ஒப்படைத்து நகராட்சி வேலைகளுக்கு தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தம் விதிமீறல்கள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடவும், உடையும் நிலையில் உள்ள பாதாள சாக்கடைகளை மழைக்காலம் தொடங்குவதற்கு ஏற்படுத்தி மக்களை காப்பாற்று, தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்ற மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு கொடுத்த விசிக செம்பை ஒன்றிய நிர்வாகி மணிவண்ணனுக்கு அலைபேசி வழியாக கொலை மிரட்டல் விடுத்த கொத்தங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!