மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் குடி மராமத்து பணிகளை சிறப்பு அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகை- மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து குடிமராமத்து சிறப்பு அதிகாரி சந்திரமோகன் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் மற்றும் குடி மராமத்து பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பணிகளை விரைவில் முடிக்கவும் உத்தர விட்டனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குடிமராமத்து சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவிக்கையில்;

80 தூர்வாரும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது சுமார் 1073 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த தூர்வாரும் பணிகள் 204 மண் அள்ளும் இயந்திரங்களை வைத்து இதுவரையில் 740 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 333 கிலோமீட்டர் தொலைவிற்கு கூடுதலாக மண் அள்ளும் இயந்திரங்களை வைத்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்வதற்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும், நாகை மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து பணி யின் கீழ் 131 பணிகள் நடைபெறுவதாகவும். இந்தப் பணிகளின் நிலைகள் குறித்து அவ்வப்பொழுது அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து நேரில் சென்றும் பார்வையிட்டு வருவதாகவும் இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். நாகை மாவட்டத்தில் A&B வகை சார்ந்த வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் முதலில் முடிக்கப்படும். A&D வகை வாய்க்கால்களில் தண்ணீர் வந்த பிறகு C&D வகை வாய்க்கால்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!