செங்கம் அருகே, விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த, நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன், படுகாயம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் வனப்பகுதிகளில், சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து, வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் மகன் தீபக், 7, நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விளையாட சென்றான். அங்கு, ஒரு நாட்டு வெடிகுண்டு இருந்துள்ளது. அதை பந்து என நினைத்து எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் வீடு திரும்பும்போது, நாட்டு வெடியை கடித்தபோது, அது வெடித்து அவனது வாய், தாடை பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக, பெற்றோருக்கு நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவன் தீபக், செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!