செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடை பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆக்கூர் நவின அரிசி ஆலை கிடங்கியிலும், பருத்தி மறைமுக ஏலம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறைவிற்பனை கூட மேற்ப்பார்வையாளர் பி.மா பாபு தலைமையில் பருத்தி ஏலம் நடைப்பெற்றது.இதில் இந்திய பருத்தி கழகத்திலிருந்து ரமேஷ், இளங்கோவன், ஆனந்தன் குட்டி குமார், தஞ்சை மாவட்ட வியாபாரி திருமாறன், ராஜவேல், நாகை மாவட்ட வியாபாரி கலியமூர்த்தி, செந்தில்வேலன், விழுப்புரம் பழனி, சந்திரன், நாசர் மற்றும் 15 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.55.50 -க்கு விலை போனது . 600 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். வியபாரிகள் அதிகபட்ச விலை 43.89-க்கும், குறைந்த பட்ச விலை 41.50-க்கும் விலை போனது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!