சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக ‘WE ARE YOUR VOICE – 2017’ என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் லயோலா கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 26.02.17 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த பயனுள்ள முகாமில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியார் வேலை வாய்ப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த முகாமில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர இருக்கின்றன. இந்த பதிவை காணும் நண்பர்கள் அனைவரும், தமக்கு தெரிந்த மாற்றுத் திறனாளிகளிடம் கொண்டு சேர்க்குமாறு கீழை நியூஸ் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9551500061
மின்னஞ்சல் : [email protected]
வலை தள முகவரி : www.weareyourvoice.org


You must be logged in to post a comment.