தொண்டியை சார்ந்த காதல் ஜோடி எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்..

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கண்கொள்ளான்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் திக்ரிஷ் ஜெயக்குமார், 28. மாற்றுத்திறனாள். இதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி, 22. இவர் தொண்டியில் மாலை நேரக் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால், காதல் ஜோடி இருவரும் அக்., 18 ஆம் வீட்டில் இருந்து கிளம்பி ராமநாதபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினர். இந்நிலையில் இருவரும் நெல்லை மாவட்டம் வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று (22/10/2018) காலை பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இன்று மாலை ராமநாதபுரம் வந்தனர். பாதுகாப்பு வழங்கக் கோரி பதிவு திருமண சான்றிதழுடன் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!