இராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் தெரு வடிவேல், 28. கார் டிரைவர். இதே பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 24. எம்பிஏ பட்டதாரி. திவ்யா தந்தை அப்பகுதியில் ஓட்டல் நடத்துகிறார். இங்கு சாப்பிட வந்த வடிவேலுக்கும், திவ்யாவுக்கும் இடையேயான நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யாவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆக., 28ல் திவ்யாவை, வடிவேல் காளையார்கோவில் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார் பதிவாளத்தில் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகு ராமேஸ்வரம் திரும்பிய காதல் மண தம்பதிக்கு திவ்யாவின் உறவினர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அச்சமடைந்த வடிவேல், திவ்யா தம்பதியினர் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (05/09/2018) மதியம் தஞ்சமடைந்தனர். தங்களுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து புகார் கொடுத்தனர். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தம்பதியினர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.



You must be logged in to post a comment.