மதுரை மத்திய சிறை ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழப்பு..

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்  பரமகுடியைச் சேர்ந்த தர்மர் (வயது 52) இன்று பிற்பகலில் அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிறை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சிறை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உயிரிழந்த தர்மரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மதுரை மத்திய சிறையில் தண்டனை சிறைவாசியாக இருந்த தேனியை சேர்ந்த அஜித்குமார் என்ற 29 வயது இளைஞர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொலை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்று கடந்த 2022 ஏப்ரல் முதல் சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கைதி அறைக்குள்ளேயே இன்று காலை வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!