லோன் பெற்ற ஒருவர் இறந்து விட்டால் நிலுவைத் தொகையை யார் செலுத்துவது? வங்கிகளின் விதிமுறை என்ன??

லோன் பெற்ற ஒருவர் இறந்து விட்டால் நிலுவைத் தொகையை யார் செலுத்துவது? வங்கிகளின் விதிமுறை என்ன??

இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சம்பாத்தியத்தை வைத்து செலவுகளைச் சமாளிக்க முடிவதில்லை.

இதனால் பலரும் கடன் வாங்குகின்றனர். அப்படி கடன் வாங்கிய பிறகு கடன் வழங்குனர் கூறிய காலகட்டத்திற்குள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஒரு வேலை கடன் வாங்கியவர் ஒரு ஈஎம்ஐ தவணையைத் தவறவிட்டாலும் அதற்கு கடன் வழங்குனர் அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவோ உரிமையுண்டு.

ஆனால் கடன் காலத்தின் போது கடன் பெற்றவர் இறந்துவிட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

இந்தப் பதிவில் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.

கடன்காலத்தில் ஒருவர் இறந்தால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு?:

கடன் காலத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த கடன் தொகைக்கு யார் பொறுப்பு?

ஹோம் லோன்: ஹோம் லோன்களை பொறுத்தவரையில் கடன் பெற்றவர் வேறு ஒருவனுடன் இணைந்து கடன் பெற்றிருந்தால் இறந்தவருக்காக மற்றொருவரை கடன் வழங்குனர் தேடுவர்.

ஒருவேளை தனிநபராக கடன் பெற்றிருந்தால் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசை கடன் வழங்குநர் அணுகலாம்.

அதோடு கடன் பெற்றவர் ஹோம் லோன் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால் கவலை இல்லை.

நிலுவையில் உள்ள கடன் தொகை காப்பீடு மூலம் செலுத்தப்படும்.மாறாக கடன் பெற்றவர் டெர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படியானால் அந்தத் தொகையானது நாமினியின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு, செயல்முறைகளை பின்பற்றி சட்டபூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.

அதன் பிறகு இறந்தவரின் வீட்டு கடன் மற்றும் பிற கடன்களை செலுத்துவதற்கு இந்த டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை சட்டபூர்வ வாரிசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கார் கடன்: கார் கடன்களை செலுத்தும் போது கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் கடன் வழங்குனர் மீதமுள்ள தொகையை வசூலிக்க கடன் வாங்கியவரின் குடும்பத்தை பார்வையிடலாம்.

வாகனம் வாங்குவதில் ஆர்வமுள்ள வாரிசுகள் இருந்தால் மீதமுள்ள நிலுவைத் தொகையை அந்த வாரிசு திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஒரு வேலை கடன் தொகையை திருப்பி செலுத்த சட்டபூர்வ வாரிசுகள் மறுத்தால், கடன் வழங்குனர் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட்டு, அதன் மூலம் தங்களுடைய இழப்பை ஈடுசெய்வதற்கு உரிமையுண்டு.

தனிநபர் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள்: பினையத்தை வைத்து வாங்கும் கடன்களுக்கு மாறாக கிரெடிட் கார்ட் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் அன்செக்யூர்டு லோன்களாகக் கருதப்படுகின்றன.

இதற்கு எந்த ஒரு சொத்தையும் வைத்து கடன் பெற வேண்டிய அவசியம் இல்லை.

கடன் காலத்தில் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் நிலுவைத் தொகையை சட்டபூர்வ வாரிசு அல்லது குடும்ப உறுப்பினர்கள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.

ஒருவேளை கடன் பெற்றவரோடு இணைந்து இன்னொருவரும் கடன் பெற்றிருந்தால் வங்கி அந்த நபரிடம் கடன் தொகையை வசூலிக்கலாம்.

ஆனால் இணைந்து கடன் வாங்கியவர் இல்லை என்றால் கடனை மீட்கும் மாற்று வழிகள் இல்லாத நிலையில் கடன் வழங்குனர் கடனை செயல்படாத சொத்தாக வகைப்படுத்தும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!