திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டியில் இராமர் – நாகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்க ளுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது இவர்கள் தங்களது வீட்டில் குடிசைத் தொழிலான முறுக்கு, மிச்சர் போன்றவை சுட்டு கடைகளுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றார்.
இந்நிலையில் தங்களது தொழிலை சிறிது விரிவு படுத்தலாம் என எண்ணயுள்ளா இதற்கு அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது இதனை இராமர் நண்பர் திருப்பதியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தனக்குத் தெரிந்த நண்பர்கள் பாபு மற்றும் சந்தோஸ் ஹோம் லோன் கடன் தரும் மகேந்திரா நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் அவர்கள் மூலம் உங்கள் வீட்டின் பத்திரத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார் இதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இராமரின் வீட்டு பத்திரத்தையும் வாங்கியுள்ளார். பின்பு தங்களுக்கு 11 – இலட்சம் தரலாம் என கூறி இராமரையும் அவரது மனைவியையும் திண்டுக்கல்லில் உள்ள மகேந்திரா நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்து 30 கையெழுத்தும் வாங்கியுள்ளனர். மேலும் முன் பணம் கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர்
இதனால் இராமரும் அவரது மனைவியும் தங்களிடம் உள்ள நகைகள் மற்றும் உறவினர்களிடம் கடன்களையும் வாங்கி 2.80 – இலட்சம் பணம் கட்டியுள்ளனர். அதை தொடர்ந்து விரைவில் உங்களுக்கு 11. இலட்சம் கடன் கிடைக்கும் என கூறி அனுப்பி உள்ளனர்
பின்பு இரண்டு மாதம் கழித்து இராமரின் செல் போனிற்கு ஒரு குருஞ்செய்தி வந்துள்ளது அதில் தாங்கள் 11. இலட்சம் கடன் பெற்றமைக்கு டீவ் ரூ.14,715/- தவணை தொகை கட்ட வேண்டும் என வந்துள்ளது. அதன் பின் மும்பையில் உள்ள மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகத்திலிருந்தும் போன் செய்து இரண்டு முறை தவணை பணம் கட்டச் சொல்லியுள்ளனர்..
இதனை கடன் பெற உதவிய நண்பர் திருப்பதியிடம் கூறியுள்ளார். அவரும் முதல் தவணையை கட்டி விடுங்கள் லோன் சாங்சன் ஆயிடுச்சு கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த இராமர் இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துளார் அவர்கள் நிலக்கோட்டை காவல்துறை துனைக் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய சொல்லியுள்ளனர் அவரும் புகார் செய்துள்ளார் இதனை விசாரித்த துணை கண் காணிப்பாளர் இந்த விவகாரங்களை காவல் நிலையத்துக்கு வெளியே வைத்து பேசி முடித்துக் கொள்ளுங்கள் என விரட்டியுள்ளார். மேலும் இராமரை தினமும் போன் செய்து மிரட்டியும் உள்ளார்.
இதனால் தன் வீட்டின் பத்திரம் மற்றும் பணம் போன்றவற்றை இழந்து விட்டோம் தற்போது 11. இலட்சம் கட்ட சொல்கிறார்கள் காவல் துறையினரும் தன்னை மிரட்டுவதால் இரண்டு நாட்களாக விரக்தியில் காணப்பட்ட இராமர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை உடனடியாக கண்டு அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இதனால் இராமரின் மனைவி நாகாலட்மி கூறியதாவது, “தங்களை ஏமாற்றிய திருப்பதி, பாபு, சந்தோஸ் மீதும் பணம் கொடுக்காமலே தவணை கட்டச் சொல்லும் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்தின் மீதும் நியமான முறையில் விசாரணை செய்யாத நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களது வீட்டின் பத்திரம் மற்றும் முன் பணமாக கட்டிய 2.80 – இலட்சத்தையும் மீட்டு தரவேண்டும்” என கூறியுள்ளார்.
மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









