மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது. யூனெஸ்கோ நிறுவனத்தின் கோட்பாட்டின் படி பள்ளியில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. எழுத்துக்களை அடையாளப்படுத்துதல் ,வாசித்தல் திறன் மற்றும் வண்ணம் தீட்டி தனக்கு பிடித்த படங்களை வரைதல் என்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.பள்ளி தாளாளர் வேல்முருகன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் .