கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முன்நின்று நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் இலக்கிய விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா மொழிதான் நம் உயிர் மொழிதான் நம் வாழ்வு என்பதை உணர்ந்து இலக்கிய வாசிப்பில் மாணாக்கர்கள் ஈடுபடவேண்டும் அதன் மூலம் ஒரு நல்ல அறிவுச் சமூகத்தை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் சிந்துவெளியும் தமிழும் என்ற தலைப்பில் மாணாக்கர்கள் உணர்ச்சிமிகு உரையாற்றி சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தனர்
இவ் விழாவின் சிறப்பு விருந்தினர் ராஜ்குமார் தமிழும் தமிழினமும் என்ற தலைப்பில் தமிழின் மிகப்பெரிய செல்வங்களான சங்க இலக்கியங்களின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.
உலக மொழிகளில் மிகவும் தொன்மையானதும் சீரிளமை குன்றாதுமான ஒரே மொழி தமிழ் மொழி என்பதை மாணவ, மாணவியர் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்
தமிழரின் ஈகைத்திறம், அக வாழ்வு, போர் முறை, சமூக அமைப்பு, நீதி பரிபாலனம், கட்டக்கலை, நீரியல் தொழில்நுட்பம் உட்படப் பண்டைய அறிவு வளங்களைக் கொண்ட செம்மைப்பட்ட நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை பற்றி மாணாக்கர்கள் சிறப்புரை யாற்றினார்.
சிறப்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவியர் ஜெபிஷா (I BCom CA), துர்கா (II BCom CA), அனந்திகா (I BCom CA) பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்
இலக்கிய விழா நிகழ்ச்சியில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவ மாணவியருக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது
தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் பொன்மாரி நன்றியுரை கூறினார் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட பல்துறை மாணவ மாணவியர் திரளாகப் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

You must be logged in to post a comment.