விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 630 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
மேலும் கடையில் பாதுகாப்பிற்க்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, காட்சிப் பதிவு பெட்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விற்பனையாளர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் போலீசார் கொள்ளை போன மதுக்கடையை பார்வையிட்டு விசாரணை செய்தனர்
மேலும் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க தீவிரபடுத்தியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.