அரசு பள்ளி ஆசிரியைக்கு நெல்லை அரிமா விருது..

மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா லயன்ஸ் கிளப் ஆப் திருநெல்வேலி கிரீன் சிட்டி டீம் டிரஸ்ட், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் நடந்தது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் 60 ஆசிரியர் , ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லையில் நடந்த விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஆப் திருநெல்வேலி கிரீன் சிட்டி டீம் டிரஸ்ட் பட்டையத் தலைவர் Ln.P.திருமலை முருகன் தலைமை வகித்தார். திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் முனைவர் S.செந்தில்வேல் முருகன், நெல்லை லயன்ஸ் கிளப் ஆப் கிரீன் சிட்டி தலைவர் திரு Ln. Er .K.செந்தில் முருகன், முதல் துணை ஆளுநர் Ln.J.K.R.முருகன் , மாவட்ட அறிவியல் மைய அதிகாரி S. முத்துக்குமார் , ஒருங்கிணைப்பாளர் செய்யாறு ஆசிரியை விசாலி மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 60 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பட்டயத் தலைவர் Ln. P. திருமலை முருகன் அவர்கள் தலைமையில் தொழிலதிபரும் , லயன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநருமான திரு லயன். J. K. R. முருகன் விருது வழங்கி கெளரவித்தார்.  விருது பெற்ற ஆசிரியர்களில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் எம்.கரிசல்குளம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இரா.வீரமாளி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!