அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி-க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு..

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு..

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்துள்ளது. தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்தது. அதன் குழுவில் உள்ள எல்ஐசி பங்குகள் ரூ.12,000 கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளன.

அதானி மீது அமெரிக்க வழக்குரைஞர்கள் 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொத்ததாக கூறப்பட்ட நிலையில், அதானி குழுமத்தில் 20 சதவீத பங்குகள் கடுமையான சரிவுக்கு உள்ளாகின.

கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்பட 7 பேர் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அளவிலான சொத்துகளை ஈட்டக்கூடிய சூரிய மின் நிலைய திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்கும், இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டை மேம்படுத்துவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்கள் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளான கௌதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ்.ஜெய்ன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதி வரையிலான பங்குதாரர் திட்டத்தின்படி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய ஏழு அதானி நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இதனால், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னோடியான எல்ஐசிக்கு ரூ.11,728 கோடி அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

அறிக்கை எழுதும் போது அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகியவை 7 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை குறைந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, வியாழக்கிழமை மட்டும் அதானி குழுமத்தில் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!