கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் இஸ்லாமிய நூலகம் திறப்பு விழா..

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கடந்த 7ஆண்டுகளாக அவசர இரத்த தான சேவை, இலவச முகாம்கள், கல்வி உதவி திட்டம், மருத்துவ உதவி திட்டம் போன்ற பல சமுதாய மற்றும் மார்க்கப் பணிகளை சிறப்பாக செய்து வரும் இஸ்லாமிய கல்விச் சங்கம், தற்போது கீழக்கரை பகுதியில் உள்ள மதரசா மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இஸ்லாமிய நூலகம் சங்க அலுவலகத்தில் இன்று (23/07/2020) வியாழக் கிழமை 04:30 மணி அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் தலைமை ஏற்று நடத்தினார். கடற்கரை பள்ளி ஜமாஅத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன், ஜனாப் அஞ்சாரிபு ஆகியோர் திறந்து வைத்தனர். ஏற்பாடுகளை பொருளாளர் சல்மான் கான் செய்திருந்தார். சங்கத்தின் து.தலைவர் அக்ரம் அவர்களின் நன்றியுரையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்த நிகழ்வு அரசாங்கம் விதித்த விதிகளுக்குட்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நூலகம் தினமும் மாலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செயல்படும். பொதுமக்களும், மாணவர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!