வீரவநல்லூர் நூலகத்தில் பாராட்டு விழா..

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இசக்கி சரவணன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுழற்கழக தலைவர் நவமணி எழுச்சி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சுழற் கழக செயலாளர் (தேர்வு) பரமசிவன் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 

வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பழனி, யோகா வெங்கடேஷ், அகத்தியன்‌, வைரவன், பாத்திலிங்கம், தாமரை செல்வி, துரைராஜ், பழனி செல்வம் சந்தனகுமார் ஆல்பா கல்வி அறக்கட்டளை தலைவர் முகைதீன் மற்றும் சுழற்கழக தலைவர் (தேர்வு) முருகேஷ் உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் திருநீற்று செல்வம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவர்கள் பெற்றோருடன் வந்து பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தெய்வ நாயகம், வைரவன், பரமசிவன் ஆகியோர் நூலக புரவலராக இணைந்து கொண்டனர். நூலகர் குமாரி நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!