செங்கோட்டை நூலகத்தில் புத்தகம் வெளியீடு..

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. சிறந்த எழுத்தாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் பேராசிரியருமான மாலிக் பாதுஷா எழுதிய “எங்க வீடு” என்ற நாவல் வெளியீட்டு விழா செங்கோட்டை அரசு நூலகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வரிசைக் கனி புத்தகத்தை வெளியிட்டார். தமிழ் செம்மல் விருதாளர், பாப்பாக்குடி அ.முருகன் நூலை பெற்றுக் கொண்டார்.

விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆதிமூலம், பொருளாளர் தண்டமிழ் தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலாசிரியர் தந்தையும் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமான வரிசைக் கனி புத்தகத்தை வெளியிட்டார். தமிழ் செம்மல் விருது பெற்ற பாப்பாக்குடி அ.முருகன் நூலை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர்கள் ஐயப்பன், இளங்குமரன், தமிழ் வாணன், தங்க ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!