ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் (13.08.2019) செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி  மாவட்டத்திற்கு அன்று மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா 13.08.2019 செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு 13.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாத வகையில்) உள்ளூர் விடுமுறை  நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு பதிலாக 31.08.2019 சனிக்கிழமை அன்று அலுவலக வேலை நாளாகும் எனவும் அறிவிக்கப்படுகிறது.மேற்படி உள்ளுர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளுர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் நடைபெறும் எனவும், திருநெல்வேலி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக்கருவூலங்களும் குறைந்த பட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள்  தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!