இராமநாதபுரம் : பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் கனி எம்பி கடிதம் எழுதிய கடிதத்தில்:-
இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை அதிபர் நம் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையான நல்லுறவு குறித்து உரையாடும் பொழுது தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்தும் முன்வைக்க வேண்டும். இலங்கை. தமிழக மீனவர்களின் பிரச்னை நிரந்தர தீர்வு காணப்படாவிடில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல், கைது, சிறை தண்டனை, அபராதம் விதிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
இதற்கான நிரந்தர தீர்வை உடனடியாக காணும் வகையில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக நம் நாட்டிற்கு வருகை தந்துள்ள இத்தருணத்தில் வலியுறுத்த வேண்டும். இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் நட்பு நாடு என்ற அடிப்படையில் பல்வேறு உதவிகளை இந்தியா முன்வந்து செய்து வரும் நிலையில் இலங்கை அரசு, தமிழ்நாடு மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். நிரந்தர தீர்வை காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், சுமுகமான முடிவு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே. நவாஸ்கனி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.