மக்கள் டீம் மற்றும் நுகர்வோர் சங்கம் இணைந்து நடத்திய சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.. போக்குவரத்து கழகத்தை எச்சரித்த நீதிமன்றம்..

சமீபத்தில் இராமநாதபுரம் – கீழக்கரை செல்லும் சாலையில் மேம்பால பணிகள் தொடங்கியது.  இப்பணி தொடங்கி சில நாட்களிலேயே அரசு பேருந்து கட்டணத்தை ₹.15/-ல் இருந்து ₹.20/- என அதிகமாக எந்த முன் அறிவிப்பும் இன்றி வசூல் செய்தனர்.  இதை கீழக்கரையில் உள்ள அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக மக்கள் டீம் அமைப்பு காதர் நுகர்வோர் நல அமைப்பு இபுராஹிம் மூலம் போக்குவரத்து துறை மீது பொது நல வழக்கு  சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில்  தொடர்ந்தனர்.  அவ்வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் எந்த சூழலிலும் பஸ் கட்டணத்தை ₹.16/-கு மேல் உயர்த்த கூடாது என தீர்ப்பு அளித்துள்ளது.

மக்களில் நலனுக்காக சட்ட ரீதியாக வெற்றி பெற போராடிய மக்கள் டீம் காதர் மற்றும் நுகர்வோர் நல அமைப்பு இப்ராஹிம் ஆகியோரை சத்தியபாதை-கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.  தீர்ப்பு நகல் பார்வைக்காக கீழே:- 

 

 

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!