காமராஜர் டிரஸ்ட் சார்பாக ஆகஸ்ட் 15. 72 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தண்ணீர் பந்தலில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியர்களுக்கு பயிர்ச்சி பெறும் விதமாக LEd tv மற்றும் Dvd வழங்கினார்கள்,மற்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியற்க்கு சுமார் 159 நபர்களுக்கு நோட்,பேனா,பென்சில்,இரப்பர் போன்றவை வழங்கப்பட்டது.
மேலும் அன்றைய தினத்தன்று பேச்சுப்போட்டி நடத்தி 18 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அதேபோல் காமராஜர் மற்றும் அப்துல்கலாம் அவர்களை பற்றிய கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக நாங்கள் இந்தியர்கள் எனும் நிகழ்வு நடத்தப்பட்டது.






You must be logged in to post a comment.