இராமநாதபுரத்தில் ரதயாத்திரை தடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை கைது செய்ததை கண்டித்து மறியல்…

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழகத்தில் தடுத்து நிறுத்தச் சென்ற தலைவர்களை தமிழக அரசு கைது செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசை கண்டிக்கும் வித கண்டித்து இராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, SDPI, இந்தியன் முஸ்லிம் லீக், தமுமுக மற்றும் இன்னும் பல தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார், திருவாடணை தொகுதிச் செயலாளர் பழனிக்குமார், இளஞ்சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் ரவிவளவன், கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது யூசுப் மற்றும் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் SDPI கட்சியை சார்ந்த பல முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். அச்சமயத்தில் SDPI கட்சி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அற்புத குமார், தமுமுக ஹனீஃப் ரசாதீ ஆகியோர் ஆளும் கட்சியை கண்டித்து சிறப்பு உரையாற்றினர்.

புகைப்படத் தொகுப்பு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!