ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி திறக்கப்பட்டது …

ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பல நாட்களாக எதிர்பார்த்த சட்டக்கல்லூரி இப்பொழுது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்சமயம் அக்கல்லூரி பெருங்குளம் ஊராட்சியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்க உள்ளது.

வெகு விரைவில் இச்சட்டக் கல்லூரிக்கான நிரந்தரமான கட்டிட அமைப்புகள் உருவாக்கப்பட்டு கல்லூரி இயங்கும் என்றும் அறியப்படுகிறது. மேலும் சட்டப்படிப்புக்கான வகுப்புகள் நாளை (30-10-2017) துவங்க உள்ள நிலையில் அமைச்சர் மணிகண்டன் சட்ட கல்லூரியினை இன்று துவங்கி வைத்தார்.

மேலும் ராம்நாதபுரம் சட்டக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு 73 மாணவர்கள் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கும், 16 பேர் 3 ஆண்டு சட்ட படிப்பிற்கும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி திறக்கப்பட்டது …

  1. இராமநாதபுரத்தில் சட்டகல்லூரி வந்தது மிகவும் வரவேற்கபடவேண்டிய ஒன்று.ஆனால்அதை அவசரகதியில் திறந்து பள்ளிவளாகத்தில் நடத்துவதைத்தான் மனம் ஏற்கமறுக்கிறது.மறைந்த முதலமைச்சர் ஜெயல்லிதா அவர்கள் 2011-2016 க்கான தேர்தல் வாக்குறுதியில் இராமநாதபுரம் மருத்துவமனையை மருத்துவகல்லூரியாக தரம்உயர்த்தி மருத்துவ கல்லூரி கொண்டுவரப்படுமென வாக்குறுதிகொடுத்தார் அந்த வாக்குறுதியையும் எடப்பாடி அரசு நிறைவேற்றிதரவேண்டுமென இதன்வாயிலாக இராமநாதபுர மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!