இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக அமைப்பினர் ஒரு படி மேல் சென்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இந்திய ஜனாதிபதிக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். அந்த வகையில் கீழக்கரையில் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மூலம் கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப் போராளிகள் குழுமம் தங்களுடைய கோரிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.
கீழக்கரை சட்டப்போராளிகளின் ஜல்லிக்கட்டுகான சட்டப்போராட்டம்.. இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை..
சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் இந்த மாபெரும் தமிழ் சமுதாய வெற்றி எனும் வெள்ளத்தில் மக்கள் நல பாதுகாப்பு கழகமும், கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப்போராளிகளும் ஒரு துளியாக இருந்ததில மெருமிதம் கொள்கிறது, அந்த மகிழ்வை எங்களுக்கு ஆதரவும், ஊக்குவிப்பும் அளித்து வரும் பொதுமக்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









