.தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ரகுபதி. இவர், சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் உள்ளே சென்று விமானத்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு அவருக்கு தலைசுற்றலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சருர் கே என் நேரு இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ரகுபதியிடம் நலம் விசாரித்தார்
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.