தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு..

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக ஆர்.சிவராஜா, செயலாளராக யோ.நிமல்ராஜ், பொருளாளராக பி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் அனந்த பாலகிட்ணர் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் நேற்று (4ம் தேதி) நடைபெற்றது.தொடர்ந்து, ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில், ஒன்றியத்தின் தலைவராக ஆர்.சிவராஜாவும், செயலாளராக யோ.நிமல்ராஜும், பொருளாளராக பி.விக்னேஸ்வரனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.உப தலைவர்களாக அனந்த பாலகிட்ணர், சி.தில்லைநாதன் ஆகியோரும், உப செயலாளராக கணபதி சர்வானந்தாவும், உப பொருளாளராக இ.நிர்ஷனும் தேர்வு செய்யப்பட்டனர்.நிர்வாக சபை உறுப்பினர்களாக என்.வித்யாதரன், ஆர்.பாரதி, எஸ்.ஸ்ரீகஜன், கு.ஜெயேந்திரன், அ.நிக்‌ஷன், எஸ்.ராஜஜோதி, இரா.செல்வராஜா, ஜி.வாஸ் கூஞ்சா, எம்.பிரேம்ராஜ், வீ.பிரியதர்ஷன், ச.பிரதீபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.வடக்கு மாகாணத்துக்கான இணைப்பாளர்களாக தர்மினி பத்மநாதன், யோ.ஜூட்நிமலன் ஆகியோரும், கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பாளராக ச.மணிசேகரனும், மலையகத்துக்கான இணைப்பாளராக கி.ஹரேந்திரனும் தேர்வு செய்யப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!