“எந்த நாட்டிடமும் கெஞ்ச மாட்டோம்..!” – கோத்தபய ராஜபக்ச

நல்லுறவு, வர்த்தகம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில், எந்த நாட்டிடமும் கெஞ்ச மாட்டோம்” என்று, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது.இதில், ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பில்,அமைச்சர்   சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பொதுஜன பெரமுனாவின் தேர்தல் அறிக்கை கொழும்பு  நகரில் நேற்று (25ம் தேதி) வெளியிடப்பட்டது. அதில், “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியா உள்பட ‘சார்க்’ நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க பாடுபடுவோம். எங்கள் வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சமாக இது இருக்கும். நல்லுறவு, வர்த்தகம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில், எந்த நாட்டிடமும் கெஞ்ச மாட்டோம். தேசத்தின் கவுரவத்தை காப்பாற்ற, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, சம அந்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!