லஞ்சம் வாங்கிய நில அளவைத் துறை பொறியாளர் கைது ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!

இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த அட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச் செல்விக்கு என்மனம் கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா உட்பிரிவு செய்ய இ-சேவை மூலமாக மனு செய்து இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தை பலமுறை நாடியுள்ளார். மேலும் நிலத்தை அளவீடு செய்து அதன் அறிக்கையை நில அளவீட்டாளர் அளந்து கணினி மூலம் பதிவேற்றம் செய்ய சம்பந்தபட்ட பகுதி நில அளவையர் சிவா என்பவரை சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது நிலத்தை அளவீடு செய்யவும் கணினியில் பதிவேற்றம் செய்யவும் பட்டா உட்பிரிவு செய்யவும் நிறைய செலவாகும் என்றும் மேல் அதிகாரிகளை தனியாக கவனிக்க வேண்டும் என்றும் அதற்கு ரூ.3,500/- என்னிடம் கொடுத்தால் வேலையை விரைந்து முடிப்பேன் என்றும் திருநாவுக்கரசரிடம் தெரிவித்து உள்ளார். மேலும் பணத்தை இன்று மாலை 5மணிக்கு மேல் இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளக இ-சேவை மையம் அருகே வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனை திருநாவுக்கரசு இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளார் . அதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இரசாயனம் தடவிய ரூ.3,500/-ரை கொடுத்து மாறு வேடத்தில் இ-சேவை மையம் அருகே அங்காங்கே மறைந்திருந்தனர். அப்போது நில அளவையர் சிவா இரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு போலிஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!