கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்க அரசுக்கு இலவசமாக மணை வழங்கப்பட்டது…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா முஸ்லிம் சங்கத்திற்கு பத்தியமான கீழக்கரை மையப் பகுதியில் அமைந்துள்ள மேலத் தெரு சதக்கத்துல்லா அப்பா வளாகம் என்ற இடத்தில் உள்ள 20 செண்டு இடத்தை காவிரி கூட்டுக் குடிநீர் சேமிக்கும் உயர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக அரசுக்கு இலவசமாகக் வழங்கப்பட்டது. அந்த இடத்தின் பத்திரத்தை இன்று 16.10.2020 கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்கம் தலைவர் S.M.யூசுப்சாஹிபு, உபதலைவர். H.Sமுஜிப்ரஹ்மான், செயலாளர். N.D.S.சதக்அன்சாரி, ஹாமீது இப்ராகிம் தாளாளர் ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் இடம் அளித்தார்கள்.

அந்த இடத்தின் பத்திரத்தை கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு தனலட்சுமி பெற்றுக்கொண்டார்.  உடன் சங்க நிர்வாகிகள் T.P.S.சேகுசுலைமான் நிர்வாககுழு. மேலாளர் M.அப்துல்ரஜாக்உமர்மற்றும் நகராட்சி தலைமை பொறியாளர் மீரான், சுகாதார ஆய்வாளர் பூபதி, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல்,உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

அது மட்டும் இன்றி கீழக்கரை காவல் நிலையம், நகராட்சி அலுவலகம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கீழக்கரை பேருந்து நிலையம், பத்திர பதிவு அலுவலகம், மின் நிலைய அலுவலகம், டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகம், குப்பை கிடங்கு, உள்ளிட்ட பல இடங்களை சங்கத்தின் நிர்வாகிகள் அரசு இலவசமாக வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!