இராமநாதபுரத்தில் தொழிலாளர் நலச் சட்ட கருத்தரங்கு..

சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் நலச் சட்ட கருத்தரங்கு இராமநாதபுரத்தில் நடந்தது. இராமநாதபுரம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

இராமநாதபுரம் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.ராமலிங்கம் வரவேற்றார். ராமநாதபுரம் லோக் அதாலத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பி.ஆர்.ராமகிருஷ்ணன், தலைமை உரிமையியல் நடுவர் எம்.சிவப்பிரகாசம், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, செயலாளர் ஏ.ஆர். நம்பு நாயகம், தொழிலாளர் உதவி ஆணையர் பி.சங்கர், தொழிலாளர் துணை ஆய்வாளர் ஜி. மலர் விழி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலர் எஸ்.துரைமுருகன் உள்பட பலர் பேசினர்.

நகர் வர்த்தக சங்கத் தலைவர் பி.ஜெகதீசன், செயலர் குப்தா கோவிந்தராஜன், பரமக்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ஒய்.ஜபருல்லா கான், சிஐடியு . மாவட்ட செயலர் எம்.சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!