நஞ்சையே உணவாக விற்கின்றன இக்காலத்தில் நஞ்சில்லா உணவகம் “LAA RAIB”..

“நோயற்ற வாழ்வே, குறைவற்ற வாழ்வாகும்”, ஆனால் அந்த நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு கலப்படம் இல்லாத இயற்கையான உணவு என்பது மிகவும் அவசியம். ஆனால் இன்று சந்தையில் காலப்பபடமில்லாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு தரமற்ற பொருட்கள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன.

ஆனால் இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை வடக்குத் தெருவில் நாளை (29-12-2017), வெள்ளிக் கிழமை,  ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு உதயமாக உள்ளது “LAA RAIB” எனும் “நஞ்சில்லா உணவகம்”. இங்கு முழுக்க முழுக்க எந்த வேதிப்பொருட்களும் கலப்படமில்லாத இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய உள்ளார்கள்.

மேலும் இவ்உணவகத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு 2912-2017, மாலை 6.30 (மக்ரிப் தொழுகைக்குப் பிறகு) மணியளவில் “நாஞ்சில்லா உணவு” என்ற கருத்தரங்கமும் ஏற்பாடு செய்துள்ளனர். இக்கருத்தரங்கில் அக்கு ஹீலர் தெரபிஸ்ட் லயன் நிஷா உரையாற்ற உள்ளார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!