மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜய் அண்பன் கல்லாணை அறிவுறுத்தலுக்கிணங்க நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்தார் .வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தாமு முன்னிலை வகித்தார் .வாடிப்பட்டி மாதா கோவில் முன்பாக பந்தல் மூலம் கோடை வெப்பத்தை தவிர்க்கும் பொருட்டு நீர், மோர் ,சர்பத் தர்ப்பூசணி வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர் ரோஷன், வழக்கறிஞர் தியாகராஜன், பரமன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பசுமணியன், சோழவந்தான் பேரூர் செயலாளர் சுரேஷ், கௌதம், செந்தூரப்பாண்டி, தினேஷ் ,பாண்டி தென்கரை மோகன், குருவித்துறை பிரகாஷ் ,உட்பட வாடிப்பட்டி ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
