வத்தலக்குண்டுவில் இரண்டரை இலட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கிய பலசரக்கு கடைக்காரர் கைதானார்.
வத்தலக்குண்டு பகுதியில் அதிகளவில் குட்கா விற்பனை நடந்துவந்தது. பள்ளி மாணவர்கள் உள்பட பலர் அதை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இதுபற்றிய தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சக்திவேல் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான சிறப்பு படையை வத்தலக்குண்டு அனுப்பினார்.
வத்தலக்குண்டு வந்த சிறப்பு படையினர் வத்தலக்குண்டு பிலீஸ்புரத்தில் உள்ள பாலரமேஷ் பலசரக்கு கடைக்கு சென்று விசாரணை நடத்தினர் அதைத் தொடர்ந்து அருகில் உள்ள அவரது குடோனை திறந்து காட்ட சொல்லி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரூபாய் இரண்டரை லட்சம் பெறுமான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை உணவு பாதுகாப்பு பரிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
குட்காவை பதுக்கிய பாலரமேஷை வயது 40 போலீசார் கைது செய்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
வத்தலக்குண்டு பிலீஸ்புரம் பலசரக்கு கடை அதிபர் பாலரமேஷ் குடோனில் போலீசார் பறிமுதல் செய்ய குட்கா பண்டல்களை படத்தில் காணலாம்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர்:- ராஜா


You must be logged in to post a comment.