கீழக்கரையில் மிகவும் பழமை வாய்ந்ததும், அனைத்து பெரியவர்களும் அதிகமாக தொழ வரும் இடம் குத்பா பள்ளி என்றே கூறலாம். ஆனால் கடந்த சில மாதங்களாக அப்பள்ளி செல்லும் வழி மற்றும் நடுத்தெரு சாலையெங்கும் வழிந்தோடும் சாக்கடையை நிறுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
இது சம்பந்தமாக விசாரித்த பொழுது, பெயர் வெளியிட விரும்பாத நகராட்சி அதிகாரி கூறியதாவது, அத்தெருவில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் இருந்து தான் கழிவு நீர் வெளியேறுகிறது, சம்பந்தப்பட்ட வீட்டினரை அணுகிய பொழுது, அவர்கள் சூனியம் செய்பவர்கள் என்றும், எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உங்கள் மீதும் செய்வினை வைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அத்தெரு வாசிகளும் அவ்வீட்டாரிடம் பேச தயங்குகிறார்கள் என்று கூறியது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்விசயத்தில் நிரந்தரமாக தீர்வு காண மக்கள் பொது தளம் மற்றும் பல சமூக அமைப்புகள் குரல் எழுப்பிய வண்ணம்தான் உள்ளார்கள், ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கு ஒரே வழி, சிந்தனையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் சுகாதாரம் நலன் கருதி ஏகத்துவ சிந்தனை உள்ள சகோதரர்கள் ஒன்றிணைந்து இந்த வழிகேட்டின் பயமுறுத்தலுக்கு எதிராக களம் இறங்கினாலே விடிவு காலம் பிறக்கும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










One thought on “கீழக்கரை குத்பா பள்ளி தெருவின் அவல நிலை.. கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம்…”
Comments are closed.