திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் படகு குழாமில் படகு சவாரிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் 27.07.19 சனிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.பின்பு மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
பருவ காலங்களில் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குற்றாலத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா விடுதியும் படகு இல்லங்களையும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் படகு குழாம் ஒவ்வொரு ஆண்டும் பருவகாலங்களில் படகு சவாரிகளை துவக்கி செயல்படுகிறது.கடந்த ஆண்டு 16.06.2018 முதல் 16.09.2018 படகு சவாரி விடப்பட்டது. இதில் 15,580 நபர்கள் படகு சவாரி செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.7.38 இலட்சம் வருமானம் ஈட்டியுள்ளது.இதில் 33 படகுகள் அரசு நிர்ணயக்கபட்டுள்ள குறைந்தளவு கட்டணத்தில் இயக்கபடுகிறது. ஒரே சமயத்தில் 100 நபர்கள் பயணித்திட ஏதுவாக படகுகள் தயார் நிலையில் உள்ளது.பொது மக்கள் பாதுகாப்பிற்கு லைப் ஜாக்கெட் உயிர்காக்கும் ஆடை 200ம், மீட்பு பணிக்காக நீச்சல் தெரிந்த வீரர்களுடன் மீட்பு படகும் தயார் நிலையில் உள்ளது.பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மகிழச்சியாகவும் அதை சமயத்தில் பாதுகாப்பாகவும் பயணித்து மகிழ வாழத்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்வில் சுற்றுல அலுவலர் சீதாராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி சுற்றுலா அலுவலர்கள் நித்ய கல்யாணி, திரு.கண்ணன், தமிழ்நாடு சுற்றுலா வளாச்சி கழக மேலாளர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









