மயிலாடுதுறை, மே-08; மயிலாடுதுறை, குத்தாலம் பகுதிகளை சேர்ந்த விடுதிகளில் தங்கி பயிலும் ஆதரவற்ற ஏழை மாணவிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நாகை மாவட்ட சமூக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின்
வழிகாட்டுதலின் படிவிடுதியில் தங்கிபடிக்கும் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவிகளுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை பொறையார் த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர்கள் ராஜா சாலோமன், ஜோசப் பன்னீர்தாஸ். கிருஸ்டோபர் புஷ்பராஜ், ஜோசப் அமிர்தராஜ், ஸ்ரீதர், பிரேம்குமார்,ராபின்சன், சி.பி.ஜெயசீலன், புகழேந்தி மற்றும் ஜீவன் ஆகியோர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கினர் சமூகபாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுதுகாப்பு சமூக அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ்
சமூக ஆர்வலர் பேராசிரியர் தேவசகாயம் ஆகியோர் ஒருங்கினைப்பு செய்திருந்தனர்.
இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை.


You must be logged in to post a comment.