உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை தீ வைப்பதையும் சாலையில் மற்றும் வார்டு பகுதியில் குப்பைகளை சேகரித்து சுகாதாரப் பணியாளர்கள் தீ வைப்பதை தடுக்க கோரி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள குப்பைகளை சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை வாங்கி பேரையூர் சாலையில் உள்ள மின் மயானம் அருகே குப்பை கிடங்கில் தரம் பிரித்து வருகின்றனர். மேலும் பேரையூர் சாலை பண்ணப்பட்டி குப்பை கிடங்கில் தீ வைப்பதால் அடிக்கடி விபத்து மற்றும் சுகாதாரக் கேடு வருவதாக கூறி மதுரை மாவட்டம் சார்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் டாக்டர் பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை
மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ்
மாவட்ட பொருளாளர் சின்னகொடி
மாவட்ட இணைய செயலாளர் வழக்கறிஞர்
ஜெய தமிழ்செல்வி மாவட்ட
துணை தலைவர்
மு ஜெகதீசன் மாவட்ட துணை செயலாளர் திருலோகநாதன் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் சக்திவேல் இடமும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையாளர் சக்திவேல் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.