அரச மரத்து பட்டி மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் எரவார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்து பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் கும்பாபிஷேக சிரோமணி பிரம்மஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் தலைமையில் ஆச்சாரியார்கள் இரண்டு நாட்கள் யாக பூஜை நடத்தினர். இதைத் தொடர்ந்து யாகபூஜை நடைபெற்று பூர்ணாஹீதி நடந்தது. இதைத் தொடர்ந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். மந்தை அம்மனுக்கு பால் தயிர் உட்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அரசமரத்துபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!