மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் திருக்கோவில் இந்த கோவிலை சுற்று புதர் மண்டி காணப்படுவதோடு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.நிதி பற்றாக்குறை காரணமாக இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் கால தாமத படுத்தி வந்த சூழலில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞமான திமுக மதுரை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் முதல் இந்த கோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தூய்மை பணி செய்து கொண்டிருந்த போது கோவில் அருகே சுமார் 200 ஆண்டு பழமையான குளம் இருக்கும் இடம் தெரியாது புதர் மண்டி கிடந்ததைக் கண்டறிந்து குளத்தை தூர்வாரினர்.ஆதி காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தண்ணீர் தேவைக்காக இந்த குளம் பயன்பட்டதாகவும் காலப்போக்கில் புதர் மண்டி மண் மேடாக காட்சியளித்தாகவும் கூறப்படுகின்றது.பழமையான கட்டமைப்புகளுடன் தெப்பம் போல காணப்படும் இந்த குளத்தை தூர்வாரியதன் மூலம் நீரை தேக்கி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பெரும் வகையில் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர்.கோவிலை சுத்தம் செய்த போது பல ஆண்டுகளாக புதர் மண்டிய சூழலில் அடையாளம் தெரியாமல் இருந்த குளத்தை மீட்டெடுத்த சம்பவம் அப்பகுதி கிராமமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.,
உசிலை மோகன்
You must be logged in to post a comment.