இராமநாதபுரம், செப்.8- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கோகுலாஷ்டமியையொட்டி 18 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு இன்று காலை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகளை 110 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். திமிறிய காளைகளின் திமில் பிடித்து அடங்கிய காளையர்கள், ஆட்ட நேரம் முடியும் வரை தூசு போக்கு காட்டி அடங்க மறுத்த காளைகளுக்கு பல்வேறு பரிசு வழங்கப்பட்டது, மாவட்ட திமுக பொருளாளரும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினருமான முருகேசன்,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ஆர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசை வீரன், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே.கே. செல்வக்குமார், கீழக்கரை தாசில்தார் எஸ்.பழனி குமார், நகராட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.ஹமீது சுல்தான், வருவாய் தலைமை நில அளவையர் சொக்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். விழா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலரும், ஜல்லிக்கட்டு பேரவை ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான ஆதித்தன் தலைமையில் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், இளைஞர் விளையாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









