இராமநாதபுரம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா..

இராமநாதபுரத்தில் உள்ள கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் நான்காம் ஆண்டு ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி கயல்விழி கலந்துகொண்டு மழழையர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் பள்ளியில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார், அதில் விளையாட்டு டென்னிஸ் மற்றும் பல வித விளையாட்டுகளில் மாவட்டம் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியலும், கல்வி தனித்திறமை போட்டி, பரதம், ஸ்கேட்டிங், சிலம்பம், யோகா, போன்ற கலைகளில் முதலிடம் பெற்ற விபரங்களையும், கின்னஸ் ரெக்கார்ட் வாங்கிய விபரங்களை எடுத்துரைத்தார். பின்னர் நாட்டுப்புற பாடல் ஆசிரியர் வேல்முருகன் நாட்டுப்புற பாடல்களை பாடி மழழையர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கரூர் பரணி வித்யாலய சீனியர் முதல்வர் ராமசுப்ரமணியன் மோட்டி மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி சேர்மன் மாதவனூர் கிருஷ்ணன், பள்ளி தாளாளர் கணேச பாண்டியன், செயலாளர் ஜீவ லதா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!