கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் (KPGC) சார்பாக 01/02/2019 மற்றும் 02/02/2019 நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சி ..

கீழக்கரையில் கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் (KPGC) சார்பாக இஸ்லாமிய மார்க்க தர்பியா நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இஸ்லாமியா பள்ளி மைதானம் (கிஷ்கிந்தா)வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அழைப்பு பணியின் அவசியமும் அதன் இன்றைய நிலை குறித்தும் இஸ்லாமிய கொள்கை பற்றியும் மௌலவி அப்பாஸ் அலி மற்றும் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் இடையில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!