ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கோயம்பேட்டில் சலூன் கடை நடத்துபவர், கொத்தமல்லி வியாபாரி, பூ வியாபாரிகள் ஏழு பேர் என அடுத்தடுத்து தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனிடையே, ஏப்ரல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நான்கு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதனால், ஏப்ரல் 25ம் தேதி பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்களை வாங்க குவிந்தனர். தனிநபர் இடைவெளி என்பது அப்போது முற்றிலும் கடைபிடிக்கவில்லை.
தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்த மற்ற வியாபாரிகளுக்கு தொற்று பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 28-ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை வித்திக்கப்பட்டது. அடுத்தடுத்து வியாபாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மே 5ம் தேதி முதல் மூடப்பட்டது.
கோயம்பேடு சந்தையிலிருந்து உருவான நோய்ப்பரவல் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு பரவி உள்ளது. இதில், சென்னை, கடலூர், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.
சென்னையில் ஏப்ரல் 30ம் தேதி வரை 906 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 8 நாட்களில் மட்டும் புதிதாக 2,137 பேர் சென்னையில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஒட்டுமொத்த தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும் 3847 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் புதிய தொற்றுகள் அதிகமாக கண்டறியப்படுகின்றன. அதற்கான முதன்மைக் காரணங்களில் குறிப்பிடத்தக்கது கோயம்பேடு பரவல்.
சென்னையில் கோயம்பேடு வியாபாரிகள், ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர், அங்கு பணியாற்றி அரசு ஊழியர்கள், காவலர்கள், மார்க்கெட்டுக்கு வந்து சென்ற பொதுமக்கள் மக்கள் என இதிவரை சுமார் 500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்பேடு வந்து சென்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்வும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் ஏப்ரல் 30ம் தேதி வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8 நாட்களில் 384 பேருகும் கோயம்பேடு பரவலால் தொற்று ஏற்பட்டுள்ளது. அரியலூரில் ஏப்ரல் 30-ம் தேதி வரை 6 பேர் மட்டுமே பாதித்திருந்தனர்.
கோயம்பேடு பரவலால் அதிகம் பாதிப்புக்குள்ளான இம்மாவட்டத்தில் கடந்த 8 நாளில் சுமார் 239 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்கள். மேலும், கோயம்பேட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய 1000-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தனிமைப்படுத்துள்ளனர்.
விழுப்புரத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும் 176 பேர் கோயம்பேடு பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கோயம்பேடு வந்து சென்றதால் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல் திருவள்ளூரில் 180 பேரும், காஞ்சிபுரத்தில் 44 பேரும், செங்கல்பட்டில் 32 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், நீலகிரியில் 4 பேரும், புதுக்கோட்டையில் 3 பேரும், தர்மபுரியில் 3 பேரும், திருப்பூரில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









