ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் க.புத்தனேந்தல் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு அரசமகன்,சிவகாளி, சப்த கன்னிகள்,அரவான், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மாசிக் களரி பெருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது முன்னதாக அரச மகனுக்கு பலகாரம் நவதானியங்கள் படைத்து வழிபாடு செய்தனர் தொடர்ந்து பூஜை பெட்டிகள் புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது பின்னர் பக்தர்கள் பால் பொங்கல் வைத்தும் ஆடுகள் பலியீட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் பேச்சிஅம்மனுக்கு ஞானப் புல்லால் தோரணம் கட்டி பாலால் செய்யப்பட்ட கரும்பு அருந்தும் நிகழ்வும் நடைபெற்றது பின்னர் மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மங்கல தீப ஆராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

You must be logged in to post a comment.