கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 23.05.2025 முதல் 27.05.2025 வரை மழைப்பொழிவு அதிக அளவு இருக்கும் எனவும், சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
பேரிடர் மேலாண்மை பணிக்கென மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு தொலைப்பேசி எண். 04254 222151 கொண்ட நிவாரண உதவி மையம் /கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மழையினால் பாதிப்பு ஏதுவும் ஏற்பட்டால் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி குடிக்க வேண்டும்
வீடுகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். மழை நின்றவுடன் வீடுகளின் முன் தேங்கி உள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் சாலைகள் வடிகால்கள்
மற்றும் நீரோடைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்
நகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து குப்பைகளை தர வேண்டும்
மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்
செய்தியாளர் சாமுவேல்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









