திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் வழக்கம்.கோடை வசந்த விழாவை முன்னிட்டு கொண்டாடப்படும் பகுகுனித் திருவிழா நிகழ்ச்சியில் உற்சவர் தினமும் காலையிலும், மாலையிலும் சிம்ம வாகனம் , தங்கமயில் வாகனம், தங்க பல்லாக்கு, தங்க குதிரை வாகனம், நந்தி வாகனம், கஜேந்திர வாகனம் பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெரிய ரத வீதி, கீழரத வீதி , மேல ரத வீதி, சன்னதி தெரு வழியாக உற்சவர் வீதி உலா நடைபெறும்.இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனித்விழா வரும் 26 ஆம் தேதி 12ஆம் நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை நடைபெறும்.பின்னர் 27ஆம் தேதி (13ம் நாள் நிகழ்வாக ) பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் .28ஆம் தேதி (14ம் நாள் திருவிழா) திருக்கல்யாணம் நிகழ்சி நடைபெற உள்ளது. 29ஆம் தேதி (15ம் நாள் திருவிழா |நிகழ்வாக பெரிய திருத்தேர் கிரிவலப்பாதையில் வலம் வரும்.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிர மணிய ஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. விழாவிற்கு திருக்கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சத்தியப்பிரியா மற்றும் நிர்வகிகள் கலந்து கொண்டனர்.கொடியேற்ற நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!