கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாளாளர் M. துரைசாமி நினைவாக பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கோத்தகிரி C.S.I மேல்நிலைப் பள்ளி, தென் பொன்முடி E.A.B அரசு மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மேட்டுப் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான கபடி போட்டியில், 4 குழுக்களும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் 11 குழுக்களும், பெண்களுக்கான கோ-கோ போட்டியில் 5 குழுக்களும் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன.

கபடி போட்டியில் சிறுமுகை அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றது. தென் பொன்முடி E.A.B அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் மேட்டுப் பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. தென் பொன்முடி E.A.B அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தை பெற்றது. பெண்களுக்கான கோ – கோ போட்டியில் பெத்திக் குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், மேட்டுப் பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். வே. சுகுணா கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி ஊக்குவித்தார்.